வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 12 ஜூலை 2018 (15:21 IST)

பார்க் ஹோட்டல் ஞாபமிருக்கா ஸ்ரீகாந்த்? - ஸ்ரீரெட்டியின் அடுத்த குண்டு

சினிமா வாய்ப்பிற்காக தன்னை பலரும் படுக்கையில் பயன்படுத்தியதாக புகார் கூறி பரபரப்பை கிளப்பி வரும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் வரிசையில் நடிகர் ஸ்ரீகாந்தும் இணைந்துள்ளார்.

 
பிரபல தெலுங்கு நடிகர் ஞானி உட்பட பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார். அதேபோல், என்னை படுக்கையில் பயன்படுத்திய பிரபல தமிழ் இயக்குனர் பற்றி நேரம் வரும் போது கூறுவேன் என கூறியிருந்த அவர், நேற்று அது இயக்குனர் முருகதாஸ் எனக்கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
 
ஹாய் தமிழ் இயக்குனர் முருகதாஸ். உங்களுக்கு கிரீன் பார்க் ஹோட்டல் ஞாபகமிருக்கிறதா? எனக்கு நல்ல கதாபாத்திரம் ஒன்றை கொடுப்பதாக வாக்களித்தீர்கள். நமக்குள் பலமுறை ........... நடந்தது. ஆனால், தற்போது வரை எனக்கு எந்த வாய்ப்பையும் நீங்கள் கொடுக்கவில்லை என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

 
இந்நிலையில், இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இன்று தனது முகநூலில் “5 வருடங்களுக்கு முன்பு சினிமா நட்சத்திரங்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டிக்காக ஹைதராபாத் வந்த போது பார்க் ஹோட்டலில் உங்களை சந்தித்தேன். அப்போது, எனக்கு வாய்ப்பு தருவதாக கூறி என்னை பயன்படுத்திக் கொண்டீர்கள். ஞாபகமிருக்கிறதா?” எனக்கூறி நடிகர் ஸ்ரீகாந்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
 
இதுவரை தெலுங்கு சினிமா உலகத்தின் மீது பாலியல் புகார் கூறியவந்த ஸ்ரீரெட்டி, தற்போது இயக்குனர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் என தமிழ் சினிமா பிரலங்களின் மீது புகார் கூற தொடங்கியிருப்பது தமிழ் சினிமாத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.