Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

3வது அணியை தடுக்க சோனியாவின் மாஸ்டர் பிளான்

Last Modified புதன், 14 மார்ச் 2018 (09:00 IST)
பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது அணியை அமைக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் ஆகியோர் முயற்சி செய்த நிலையில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறுவதை தடுக்க சோனியா காந்தி மாஸ்டர் பிளான் ஒன்றை செய்துள்ளார்.

இதன் காரணமாக டெல்லியில் 20 கட்சி முக்கிய தலைவர்களுக்கு நேற்று இரவு சோனியாகாந்தி விருந்தளித்தார். இந்த விருந்தில் திமுக சார்பில் கனிமொழி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தற்போது இந்தியாவில் உள்ள 22 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. வலிமையான பாஜகவை தோற்கடிக்க பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் அனைத்தையும் ஒன்றிணைக்க திட்டம் போட்ட சோனியா காந்தி, 20 கட்சிகளுக்கு விருந்தளித்து கூட்டணிக்கு அச்சாரமிட்டுள்ளார். ஆனாலும் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்கனவே கூட்டணி வைத்து பிரிந்து போன கட்சிகள் இதில் இருப்பதால் மீண்டும் கூட்டணி அமையுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்


இதில் மேலும் படிக்கவும் :