வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 13 மார்ச் 2018 (12:08 IST)

பாஜக அரசை ஸ்தம்பிக்க வைத்த மகாராஷ்டரா விவசாயிகள் பேரணி!

மகாராஷ்டரா மாநில விவசாயிகள் நடத்தி கொண்டிருக்கும் பேரணியை பார்த்து ஆளும் கட்சியான பாஜக அரசு ஸ்தம்பித்துள்ளது.

மகாராஷ்டராவில் உள்ள நாசிக் என்ற பகுதியில் கடந்த வாரம் செவ்வாய்கிழமை அன்று விவசாயிகள் மும்பை சட்டசபையை முற்றுகையிடும் நடைபேரணியை தொடங்கினர். கடந்த வாரம் வேறும் நூறு பேர்களை மட்டும் கொண்டு தொடங்கப்பட்ட அந்த பேரணியில் தற்போது வரை 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
 
இந்த போராட்டத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடி, பயிர் கடன் ரத்து உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து  போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த பேரணியில் விவசாயிகளுடன் சேர்ந்து பழங்குடியன மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
 
தற்போது மும்பை வரை சென்றுள்ள இந்த பேரணி. இன்றுக்குள் மும்பை சட்டசபையை முற்றுகையிடம் என்று எதிர்பார்கப்படுகிறது. இதனால் மகாராஷ்டரா மாநிலத்தை ஆளும் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு விவசாயிகளின் கோரிக்கையை குறித்து ஆலோசிக்க அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளது.