செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (16:29 IST)

ஹேமமாலினி கண்ணம் போன்ற ரோட்..... சஞ்சய் ராவத் விளக்கம்!

ஹேமமாலினி கண்ணம் குறித்த பேச்சுக்கு சிவ சேனா கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் விளக்கம். 

 
மகராஷ்டிரா மாநிலத்தின் குடிநீர் விநியோகத்துறை அமைச்சராகவும், ஜல்காவ் தொகுதி எம்.எல்.ஏவுமாக இருப்பவர் குலாப்ராவ் பாட்டீல். சமீபத்தில் ஜல்காவ் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், எனது அரசியல் போட்டியாளர்களும், 30 ஆண்டுகளுக்கும் மேல் எம்.எல்.ஏவாக இருப்பவர்களும் கூட என தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் தரத்தை பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஹேமமாலினியின் கன்னம் போன்ற சாலைகளை பிடிக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்கிறேன் என பேசியுள்ளார்.
 
நடிகை ஹேமமாலினி தற்போது பாஜக கட்சியின் எம்.பியாக பதவியில் உள்ள நிலையில் அவரது கன்னத்தை ஒப்பிட்டு சிவசேனா எம்.எல்.ஏ பேசியது பாஜகவினரின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து சிவ சேனா கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் விளக்கம் அளித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, சாலைகளை பாஜக எம்பி ஹேமமாலினியின் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசியதற்கு குலாப்ராவ் பாட்டீல் மன்னிப்பு கேட்டு விட்டார். அவர் தவறான முறையில் அவ்வாறு கூறவில்லை. பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூட ஒருமுறை இது போன்று ஒப்பீடு செய்துள்ளார். ஹேமமாலினியை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.