திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (14:33 IST)

குற்றாவாளிகளை பாதுகாக்கும் கேரள அரசு - மத்திய அமைச்சர் விமர்சனம்

அரசியல் தலைவர்கள் கொலை விவகாரம் குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பேட்டி. 

 
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (Social Democratic Party of India) கட்சியின் மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான்; பாரதிய ஜனதா கட்சியின் ஒ.பி.சி பிரிவின் மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீநிவாசன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஆலப்புழா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது,  கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இங்கு 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கொல்லப்பட்டுள்ளனர். இங்கு சட்டம் ஒழுங்கு இல்லை.
 
நியாயமான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இங்குள்ள அரசாங்கம் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது.