எதிர்ப்புகளை மீறி நிறைவேறியது தேர்தல் சீர்திருத்த மசோதா! – எதிர்கட்சிகள் அமளி!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் இன்று தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்று தேர்தல் சீர்திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்றும், இதன்மூலம் ஒருவர் வெவ்வேறு இடங்களில் வாக்கு செலுத்துவது போன்றவை கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எதிர்கட்சிகள் இந்த மசோதா மீது நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவாதம் தேவை என வலியுறுத்தின. ஆனால் எந்த விவாதமும் இன்றி தற்போது இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன.