திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 26 ஜனவரி 2019 (16:20 IST)

40 நாட்களுக்கு பின் 2வது உடல் மீட்பு: மேகாலய சுரங்க பரிதாபம்

கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி மேகாலயா மாநிலத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் சுரங்க பணியாளர்கள் சிலர் சிக்கி கொண்டனர். இந்த சுரங்கத்திற்குள் மழை நீர் நிரம்பியதால் அதில் சிக்கி கொண்ட ஊழியர்களை மீட்க மேகாலய அரசும் மத்திய அரசும் தீவிரமாக முயற்சி செய்தன.
 
இந்த நிலையில் இந்த விபத்து நடந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் நேற்று முன் தினம் ஒருவரது உடல் மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று இன்னொரு உடல் மீட்கப்பட்டதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோபோ ஒன்றின் மூலம் இந்த இரண்டாவது உடல் மீட்கப்பட்டதாகவும் இருப்பினும் முழு உடல் கிடைக்கவில்லை என்றும், கிடைத்த உடலின் பாகங்கலை வைத்து அவர் சிராங் மாவட்டத்தை சேர்ந்த அமீர் ஹூசைன் என்று கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்த சுரங்கத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்ற நிலையில் அவர்களது உடல்களையாவது மீட்டுக்கொடுங்கள் என்று உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.