செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 21 டிசம்பர் 2017 (09:38 IST)

மது விற்பனைக்கு தடை விதிக்க வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

மது விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனமான சைதன்ய சிரவந்தி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மது விற்பனையால் அதை அருந்துவோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. பல உயிரிழப்புகள் நடைபெறுகிறது. மது அருந்துவோரால் குற்றங்கள் மற்றும் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கூலி வேலை செய்யும் நபர்கள் குடிப்பழக்கம் காரணமாக தங்களின் குடும்பத்தை கவனிக்காமல் இருக்கின்றனர். குடியால் பலர்  பணத்தையும் இழக்கின்றனர். எனவே நாடு முழுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்கவேண்டுமென்றும் மது உற்பத்தி, வினியோகம், விற்பனை ஆகியவற்றை தடுக்க உத்தரவிடவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
 
இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனுவை  தள்ளுபடி செய்தனர். மேலும் வழக்கை தொடர்ந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.