1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 5 நவம்பர் 2017 (14:50 IST)

மழை, வெள்ளத்தை பயன்படுத்தி கொள்ளை: உஷார் மக்களே

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை இன்றுதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துள்ளது. இருப்பினும் சென்னை புறநகர் பகுதியில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துவிட்டதால் வீட்டை பூட்டிவிட்டு பலர் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


 


இந்த நிலையில் இந்த மழை, வெள்ளத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் பூட்டிய வீட்டில் கொள்ளையடித்து வருவதாக புகார்கள் குவிகிறது. ஊடகத்துரை ஒருவரின் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள் அவருடைய வீட்டில் இருந்த மூன்று பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் சில ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்ததாகவும், இந்த காட்சி எதிர்வீட்டில் உள்ள சிசிடிவியில் பதிவாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

எனவே இதுபோன்ற பல வீடுகளில் கொள்ளையடிக்கும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.