செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 31 மார்ச் 2018 (19:49 IST)

எந்த கடையில் வேண்டுமானாலும் ரேசன் வாங்கலாம்: இப்படி ஒரு முதல்வர் நமக்கு கிடைப்பாரா?

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவ்வப்போது மக்கள் மனம் குளிரும் வகையில் அறிவிப்புகளை அறிவித்து வருவதால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படி ஒரு முதல்வர் நமக்கு கிடைக்க மாட்டாரா? என்று மற்ற மாநில மக்கள் ஏங்கும் வகையில் அவரது நடவடிக்கைகள் உள்ளன

இதன்படி முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ள அடுத்த அதிரடி அறிவிப்பு  தெலுங்கானா மாநிலத்தில் வாழும் மக்கள் பல்வேறு காரணங்களில் வீடு மாறினால் ரேசன் கார்டை மாற்றாமல் எந்த கடையில் வேண்டுமானாலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்த திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இதனால் அடிக்கடி வேலை காரணமாக வெவ்வேறு இடங்களுக்கு வீடு மாற்றி செல்பவர்களுக்கு இனி ரேசன் கடை பிரச்சனையே இல்லை. இந்த திட்டத்திற்கு தெலுங்கானா மக்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். இந்த திட்டத்தை மற்ற மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.