Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓய்வு: ஆபரேசன் சக்ஸஸ்!

Last Modified திங்கள், 5 பிப்ரவரி 2018 (13:11 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்ணில் புரை ஏற்பட்டதால். அவருக்கு ஆபரேசன் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மேலும் இரண்டு நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடந்த சில தினங்களாக கண்களில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. கண்களில் தொடர்ந்து தூசி படிந்து வருவதால் கண் புரை நோய் வரும். இதனால் பாதிக்கப்பட்ட அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று காலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
 
இந்த ஆப்ரேசன் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு முதல்வர் நலமுடன் வீடு திரும்பியுள்ளார். அரசு மருத்துவமனை இயக்குனர் மேற்பார்வையில் இந்த ஆபரேசன் செய்யப்பட்டது. மருத்துவர்கள் அவரை இரண்டு நாட்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர் மீண்டும் பணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.
 
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ பிடித்து எரிந்ததை அடுத்து, அது ஆட்சிக்கும், ஆட்சியாளருக்கும் ஆபத்து என கூறப்பட்டுள்ள நிலையில் முதல்வருக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :