வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (10:45 IST)

பிரதமர் மோடி மற்றும் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி குறித்து அவதூறு ட்விட்: காவலர் சஸ்பெண்ட்

suspend
பிரதமர் மோடி மற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் என்ற பகுதியில் காவலராக பணிபுரிந்து வந்தவர் அஜய்குப்தா. இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி மற்றும் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் குறித்து அவதூறாக கருத்து பதிவு செய்திருந்தார்
 
இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த காவலர் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கி விட்டதாக தெரிகிறது. எனினும் அந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட் போலீசாருக்கு கிடைத்ததை அடுத்து அவரை காவல்துறை மேலிடம் சஸ்பெண்ட் செய்துள்ளது
 
மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது