புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (14:39 IST)

“சென்னை தினம்”; சென்னை முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு!

Chennai
ஆண்டுதோறும் ஆகஸ்டு 22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

வணிகத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி ஆகஸ்டு 22ம் தேதி 1639ம் ஆண்டில் சென்னப்பட்டிணத்தை விலைக்கு வாங்கியது. அன்று முதல் மதராசப்பட்டிணம் என்றும் சென்னப்பட்டிணம் என்று அழைக்கப்பட்டு வந்த சென்னை நகரம் தோன்றியது.

அதை சிறப்பிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு 22ம் தேதி “சென்னை தினம்” கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சென்னை தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி ஆகஸ்டு 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னையின் பெசண்ட் நகர் மறும் எலியட்ஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை தினத்தை கொண்டாடும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.