1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (09:23 IST)

டெல்லி துணை முதலமைச்சர் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை!

CBI
டெல்லி துணை முதலமைச்சர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
டெல்லியில் முதலமைச்சராக அரவிந்த் கேஜரிவால் இருந்துவரும் நிலையில் துணை முதலமைச்சராக மனிஷ் சிசோடியா செயல்பட்டு வருகிறார்
 
இந்த நிலையில் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா வீட்டில் இன்று காலை திடீரென சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர் 
 
மதுபானம் உரிமை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் 
 
டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த சோதனை குறித்து துணை முதலமைச்சர் மனிஷ் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது