Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ப்ளாஸ்டிக் தேசிய கொடியை பயன்படுத்த தடை...

Last Updated: வியாழன், 11 ஜனவரி 2018 (16:16 IST)
ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படும் நிலையில், அன்று ப்ளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேதிய கொடியை பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினவிழா கொண்டாட்டமாக டெல்லியில் வண்ணமயமான விழா மற்றும் ராணுவ அணிவகுப்பு நடக்கும். இதற்கான ஒத்திகையும் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட தேசிய கொடியை பயன்படுத்த கூடாது என கூறப்பட்டுள்ளது.

மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தேசிய கொடி பெரும்பாலும் ப்ளாஸ்டிக்கில் தயாரிக்கப்படுகிறது. ப்ளாஸ்டிக் சுற்றுபுற சூழலுக்கு ஏற்றது அல்ல என்பதால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதேபோல், சுரந்திர தின அணிவகுப்பு ஒத்திகைக்காக தினமும் காலையில் சில மணி நேரத்திற்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்தை ரத்து செய்ய இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :