1000 விமான சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன??

Last Updated: ஞாயிறு, 7 ஜனவரி 2018 (13:27 IST)
வரும் 26 ஆம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதனால், டெல்லியில் வண்ணமயமான விழா மற்றும் ராணுவ அணிவகுப்பு நடக்கிறது. இதற்கான ஒத்திகையும் தற்போது நடந்து வருகிறது.

இதனால், தினமும் காலையில் சில மணி நேரத்திற்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்தை ரத்து செய்ய இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

வருகிற 18 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை காலை 10.35 மணி முதல் 12.15 வரை விமான போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் விமான மட்டுமின்றி இந்த நேரத்தில் சரக்கு விமான போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறதாம்.


இதனால், சுமார் 1000 விமானங்களின் போக்குவரத்து முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. சுமார் 500 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது. ஏராளமான சர்வதேச விமானங்கள் ரத்து செய்யவோ, மாற்று நேரத்தில் இயக்கவோ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :