1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2018 (13:10 IST)

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு?

தனிநபர் வருமான வரி விலக்கின் உச்ச வரும்பு அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
தற்போது தனி நபருக்கு ரூ.2.5 லட்சம் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு உட்பட்டவர்கள் வருமான வரி செலுத்து தேவையில்லை. நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில், இந்த வருமான வரி உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, வரி விதிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களின் செலவீனங்கள் குறைந்துள்ளது. எனவே, அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
 
தனி நபரின் வருமான வரி விலக்கின் உச்ச வரம்பை இரண்டு மடங்காக, அதாவது ரூ.5 லட்சமாக உயர்த்துவது குறித்த ஆலோசிக்கபட்டு வருவதாகவும், குறைந்தபட்சம் ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுவது குறித்து அறிவிப்பு இந்த ஆண்டு வெளியாகும் என செய்திகள் வெளியாகியுள்ளது.