செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 5 ஜூன் 2019 (12:52 IST)

தலைமை செயலகத்தில் ஆபாச படம் – அதிர்ச்சியில் அதிகாரிகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் உணவு மற்றும் பொது விநியோகத்துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பல அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பொதுவிநியோகத்துறை செயலாளர் முக்தாசிங் தலைமை தாங்கினார்.

பல மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொள்ளும் சந்திப்பு என்பதால் நேரில் வர முடியாத அதிகாரிகள் ‘கான்ஃபரன்ஸ் வீடியோ’ அழைப்பின் மூலம் கலந்து கொண்டார்கள். அப்போது முக்தா சிங் நலத்திட்ட உதவிகள் மக்களிடம் சென்று சேர்வதில் ஏற்படும் பிரச்சினை குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென திரையில் ஆபாசப்படம் ஓட ஆரம்பித்திருக்கிறது. இதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் திரு திருவென விழித்தப்படி இருக்க சிறிது நேரத்தில் படம் நிறுத்தப்பட்டு சகஜ நிலை திரும்பியது.

இருந்தாலும் இதை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முக்தா சிங் தெரிவித்துள்ளார்.