செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 6 அக்டோபர் 2018 (08:23 IST)

நவம்பர் 16 ஆம் தேதி முதல் பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் அனுமதி : திருவாங்கூர் தேவசம் போர்டு

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் சரிமலை கோவிலுக்குள் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது.இதனையடுத்து வரும் நவம்பர் 16ஆம் தேதிமுதல் பெண்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று  திருவாங்கூர் தேவசம் போர்ட்  கூறியுள்ளது.

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: முதன் முதலாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு  வருகின்ற பெண்களுக்கு தேவையான அடிப்படைவசதிகளை மாநில அரசு சிறப்பாக மேற்கொள்ளும் என்றார்.
 
மேலும் போலீஸ் டி.ஜி.பி.லோக்நாத் கூருகையில்: குறிப்பாக சபரிமலை  ஐயப்பன் கோவிலில் பெண் பக்கதர்களுக்கு  பாதுகாப்பு அளிக்க 500 போலீஸார் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.