புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 5 அக்டோபர் 2018 (22:13 IST)

கருணாசின் முக்குலத்தோர் புலிப்படைக்கு தடையா?

சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், காவல்துறை அதிகாரி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ, ஜாதிப்பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு தடை விதிக்க  வேண்டும் என அகில இந்திய அகமுடையார் மகா சபையினர் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய அகமுடையார் மகா சபையினர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் அண்மைக்காலமாக பிற சமூகத்தினரைப் பற்றி அவதூறாக பேசி வருகிறார்.

இளைஞர்களை தவறாக வழிநடத்தி, தென் மாவட்டங்களில் சாதிக் கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். எனவே, கருணாசின் அமைப்பான முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு தடை விதிக்கவேண்டும்' என மனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும், இந்த மனு முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் காவல்துறை டி.ஜி.பி. அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அகில இந்திய அகமுடையார் மகாசபையினர் தெரிவித்தனர்.