Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புதிய 10 ரூபாய் நோட்டு எப்படி இருக்கும் தெரியுமா?

Last Modified வெள்ளி, 5 ஜனவரி 2018 (22:16 IST)
கடந்த 2016ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் புதியதாக ரூ.2000, ரூ.500, ரூ.200 ரூ.50 ஆகிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.10 நோட்டு விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் புதிய ரு.10 நோட்டு எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பிஸ்கட் நிறத்தில் உள்ள இந்த புதிய ரூ.10 நோட்டின் ஒருபுறத்தில் வழக்கம்போல மாகத்மா காந்தியின் படமும், மறுபுறத்தில் கொனார்க் சூரியக்கோயிலின் முத்திரையும் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் மற்ற ரூபாய் நோட்டுக்களில் இருப்பது போல் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலின் கையெழுத்தும் உள்ளது.

மேலும் இந்திய ரிசர்வ் வங்கி புதிய பத்து ரூபாய் நோட்டின் மாதிரியையும் வெளியிட்டுள்ளது. இந்த நோட்டு விரைவில் புழக்கத்திற்கு வந்தாலும், பழைய நோட்டுக்களும் வழக்கம்போல் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :