Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புதிய 10 ரூபாய் நோட்டு அறிமுகம்; ஆர்பிஐ தகவல்

10 rupee note
Last Updated: வியாழன், 4 ஜனவரி 2018 (18:30 IST)
பணமதிப்பிழப்புக்கு பின் புதிய 10 ரூபாய் நோட்டு சாக்லேட் பிரவுன் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

 
பணமதிப்பிழப்புக்கு பின் உயர் மதிப்பு ரூபாயான 2000 ரூபாய் வெளியிடப்பட்டது. புதிய 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளும் வெளியானது. அதேபோன்று புதிய 10 ரூபாய் நோட்டும் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி சார்பில் கடந்த மார்ச் மாதம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது புதிய 10 ரூபாய் நோட்டு சாக்லேட் பிரவுன் நிறத்தில் வெளியிட உள்ளதாக ரிசர்வ வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1 பில்லியன் 10 ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு இருப்பதாகவும், புதிய 10 ரூபாய் நோட்டுக்கான ஒப்புதலை கடந்த வாரம்தான் மத்திய அரசு வழங்கியதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 
புதிய 10 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வந்தாலும் பழைய 10 ரூபாய் நோட்டு செல்லும் என்று ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது. விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :