1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2017 (12:09 IST)

தென் ஆப்பரிக்க தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கபோகும் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள்

இந்தியாவில் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தென் ஆப்பரிக்காவில் 2019ஆம் நடக்கவுள்ள தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த உள்ளனர்.


 

 
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த செல்லாத ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டு தற்போது ரிசர்வ் வங்கியிடன் உள்ளது.
 
அனைத்து பழைய ரூபாய் நோட்டுகளை என்ன செய்வது என்று தெரியாமல் ரிசர்வ் வங்கி தன் வசம் வைத்துள்ளது. எரித்தால் காற்று மாசு ஏற்படும். இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் செயல்படும் கார்ட்போர்டு அட்டை தயாரிக்கும் நிறுவனமும், ரிசர்வ் வங்கி நிறுவனமும் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது, செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி ரிசர்வ் வங்கி கேரளாவில் உள்ள கார்ட்போர்டு தயாரிக்கும் நிறுவனத்திடம் கொடுத்துவிடும்.
 
அந்த நிறுவனம் அந்த ரூபாய் நோட்டுகளை மரக்கூழுடன் சேர்த்து கார்ட்போர்டு தாயாரிக்கும். இந்த கார்ட்போர்டுகள், பிளைவுட் அட்டைகள் தென் ஆப்பரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும். மேலும், அந்த கார்ட்போர்டுகள், பிளைவுட்கள் அனைத்தும் தென் ஆப்பரிக்கவில் 2019ஆம் ஆண்டு நடக்கவுள்ள பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.