வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2018 (06:02 IST)

ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா தாக்கல்

சமீபத்தில் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா நேற்று ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய போதிலும், மத்தியில் ஆளும் பாஜக அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில் இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறுமா? என்பது இன்றைய வாக்கெடுப்பில் தெரியவரும்

முத்தலாக் மசோதாவை அப்படியே நிறைவேற்றாமல், மாநிலங்களவை தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் வற்புறுத்தியது. ஆனால் லோக்சபாவில் விவாதிக்கப்பட்டு விட்டதால், எந்த குழுவுக்கும் அனுப்பத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறி பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே மசோதாவை தாக்கல் செய்தது

லோக்சபாவில் இந்த மசோதாவை நிறைவேற்றிய பின்னர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு அவரது கணவர் முத்தலாக் கொடுத்துள்ளதாகவும், எனவே இந்த மசோதா கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் லோக்சபாவில் குறிப்பிட்டார்