வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2018 (02:01 IST)

பொங்கல் பயணத்திற்கு உதவும் சிறப்பு பேருந்துகள்-ரயில்கள் குறித்த தகவல்

தமிழர் திருநாளான பொங்கல்  திருநாள் அடுத்த வாரம் வருவதை அடுத்து சொந்த ஊர் செல்ல சென்னைவாசிகள் தயாராகி வருகின்றனர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்யவிருப்பதால் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் குறித்த தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி சென்னையில் இருந்து 11 ஆயிரத்து 993 சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு வருகிற 9ம் தேதி நடைபெறும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இதற்காக 29 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்றும், பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

இதேபோல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில் ஜனவரி 5, 11, 12, 13, 19 மற்றும் 25 தேதிகளில் இயக்கப்படும் என்றும் இந்த ரயில்கள் சென்னையில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் என்றும் இதற்கான முன்பதிவுகள் தொடங்கிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.