சினிமா பாணியில் கொள்ளையர்களை இரவோடு இரவாக பிடித்த போலீசார்

Last Modified வியாழன், 4 ஜனவரி 2018 (05:00 IST)
தமிழக போலீசாரின் திறமைகள் பல வழக்குகளில் வெளிப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள வீட்டில் குடும்பத்தினர்களை கட்டி போட்டுவிட்டு கொள்ளையடித்துவிட்டு சென்ற கொள்ளையர்களை இரவோடு இரவாக ஒருசில மணி நேரங்களில் போலீசார் விரட்டி பிடித்து அனைவரின் பாராட்டுக்களை பெற்றுள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் மன்றாம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர் தனது வீட்டில் தனது மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார் வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவில் இவரது வீட்டில் திடீரென புகுந்த கொள்ளையர்கள், ஆறுமுகம், அவரது மகன் மற்றும் மனைவியை கயிற்றால் கட்டிப்போட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர். அதுமட்டுமின்றி வீட்டில் இருந்த காரையும் கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு ஆறுமுகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைத்த போலீசார், அந்த பகுதியில் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெரியப்பட்டி என்ற பகுதியில் கொள்ளையர்கள் தாங்கள் திருடிச் சென்ற காரை நிறுத்திவிட்டு பேருந்தில் தப்ப முயற்சு செய்தனர். இதனையறிந்த போலீசார் பேருந்தை சினிமா பாணியல் துரத்தி சென்று கொள்ளையர்கள் 4 பேர்களையும் பிடித்தனர். கொள்ளை நடந்த ஒருசில மணி நேரத்திலேயே கொள்ளையர்களை பிடித்த பொள்ளாச்சி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :