பெட்ரோல் விற்கும் விலையில் அதை திருடி குடிக்கும் குரங்கு!!


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 10 நவம்பர் 2017 (16:19 IST)
பெட்ரோல் விற்கும் விலையில் அதனை வாகனங்களில் இருந்து திருடிக்குடிக்கும் குரங்கால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 
 
ஹரியானா மாவட்டத்தில் உள்ள பானிபட்டில் உள்ள குரங்கு ஒன்று இருசக்கர வாகனங்களிலிருந்து பெட்ரோலை திருடி குடித்து வருகிறது. 
 
மக்கள் வைத்திருக்கும் உணவுப்பொருட்களை குரங்குகள் திருடி செல்வதை பார்த்திருப்போம். ஆனால், பெட்ரோலை திருடும் குரங்கு ஹரியானாவில் உள்ளது. 
 
வாகன ஓட்டிகளின் இருசக்கர வாகனங்களிலிருந்து புத்திசாலித்தனமாக பெட்ரோலை திருடி குடிக்கின்றது இந்த குரங்கு.  எஞ்சினுக்குச் செல்லும் பெட்ரோல் ட்யூபை பிடுங்கி பெட்ரோல் அனைத்தையும் குடித்து விடுகிறது. 
 
இதனால், வாகன ஓட்டிகள் சில சமயங்களில் பெட்ரோல் இன்றி திண்டாடும் நிலையும் ஏற்பட்டுள்ளதாம்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :