பெங்களூர் சாலையில் கடல் கன்னி: வைரலாகும் புகைப்படம்!!


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (22:02 IST)
பெங்களூர் சாலைகள் கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கபப்ட்டுள்ளது. தற்போது பெங்களூர் சாலையில் கடல் கன்னி இருப்பது போன்ற புகைப்படம் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. 

 
 
சாலை பள்ளங்களை சரி செய்ய பெங்களூரில் ஆங்காங்கு மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஓவிய கலைஞர் ஒருவர் சாலை பள்ளத்தில் குளம் போல தண்ணீர் வரைந்து, அதில் கடல் கன்னி போன்று வேடமணிந்த பெண் குளிப்பது போன்று டிராமா நடத்தப்பட்டது. 
 
இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து சாலையில் உள்ள குழிகளை 15 நாட்களில் மூடும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :