இளம்பெண்ணை சீரழித்த 7 பேர் - கிழக்கு கடற்கரை சாலையில் அதிர்ச்சி

rape
Murugan| Last Modified வெள்ளி, 13 அக்டோபர் 2017 (11:27 IST)
கிழக்கு கடற்கரை சாலையில் இளம்பெண் ஒருவரை 7 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
காஞ்சிபுரம் மாவட்டம், பவுஞ்சூருக்கு அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். 
 
அதை அறிந்த அந்தப்பகுதியை சேர்ந்த 7 பேர், அப்பெண்ணை ரகசியமாக பின் தொடர்ந்து சென்றுள்ளனர். மேலும், அந்த வாலிபரை தாக்கி, அங்கிருந்து விரட்டி அடித்து விட்டு, அப்பெண்ணை 7 பேரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இந்த கொடூரம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண், அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
இதையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் 3 வாலிபர்களை கைது செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய மற்ற 4 நபர்களையும் அவர்கள் தேடி வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :