Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பட்ஜெட்டால் பாதாளத்திற்கு சென்ற பங்குச்சந்தை: ரூ.4.6 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு இழப்பு

Last Modified சனி, 3 பிப்ரவரி 2018 (04:03 IST)
கடந்த 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினர்களை கண்டுகொள்ளாமல், பெரிய முதலீட்டாளர்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகஃ காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் பட்ஜெட் தினத்தன்று காலை சற்று உயர தொடங்கிய பங்குச்சந்தை பட்ஜெட்டை வாசித்து கொண்டிருக்கும்போதே இறங்கத்தொடங்கியது.

நேற்று மூன்றாவது நாளாகவும் வீழ்ச்சியடைய தொடங்கிய பங்குச்சந்தை, நேற்றை சந்தை முடிவின்பொது
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 839.91 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 35,066 புள்ளிகளில் முடிந்தது. கடந்த 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் அதிக புள்ளிகள் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைவது இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

இதில் மேலும் படிக்கவும் :