வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (16:01 IST)

ராஜ்ய சபா எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார் மன்மோகன் சிங்!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜ்ய சபா எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஆவார். இவர் தொடர்ந்து 28 ஆண்டுகளாக அசாமில் இருந்து மாநிலங்கவைக்கு தேர்வு செய்ய்ப்பட்டு வந்தார். இந்நிலையில் இவரது பதவிகாலம் கடந்த ஜூன் 14 ஆம் முடிவடைந்தது.

அவரை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், போதிய எம்.எல்.ஏ.க்கள் வேண்டும். ஆனால் அசாமில் போதிய எம்.எல்.ஏக்கள் இல்லை. இதனிடையே ராஜ்ய சபா எம்.பி.யாக இருந்த ராஜஸ்தான் மாநில பாஜக  தலைவர் மதன்லால் சைனி காலமானதால், அந்த காலியான இடத்திற்கு வருகிற 26 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ராஜஸ்தானில், காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால், ராஜஸ்தானில் இருந்து மன்மோகன் சிங்கை போட்டியிட செய்து எம்.பி.யாக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஜெய்ப்பூரில் மன்மோகன் சிங் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் போதுமான உறுப்பினர்கள் இல்லாததால் பாஜக, அவரை எதிர்த்து எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை. எனவே மன்மோகன் சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி என கூறப்படுகிறது.