புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (13:20 IST)

குரங்குகளுடன் செல்ஃபி எடுக்க ஆசை! விபரீத ஆசையால் உயிரிழந்த ஆசிரியர்!

மகாராஷ்டிராவில் குரங்குகளுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு மலையிலிருந்து விழுந்து ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நஸ்ராப்பூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா ஷேக். இவர் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அப்பகுதியில் வராந்தா காட் என்னும் அழகான மலைக்குன்று தொடர் உள்ளது.

விடுமுறை சமயத்தில் அங்கு சென்ற அப்துல்லா ஷேக் காடுகள், மலை, அருவிகளை ரசித்துள்ளார். அப்போது அங்கு மலைக்குன்றின் மேல் சில குரங்குகள் அமர்ந்திருந்துள்ளன. அவற்றோடு செல்ஃபி எடுக்க விரும்பிய அப்துல்லா ஷேக் அதற்காக அவை அருகில் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது கால் வழுக்கி குன்றின் சரிவில் அவர் விழுந்துள்ளார். சுமார் 500 அடி பள்ளமான பகுதியில் அவர் விழுத்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடம் விரைந்த போலீஸார் அப்துல்லா ஷேக்கின் உடலை மீட்டுள்ளனர். குரங்குகளுடன் படம் பிடிக்க ஆசைப்பட்டு பள்ளி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K