16 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர்கள் கைது!
மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒரு சிறுமியை 12 மணி நேரம் பலாத்காரம் செய்தவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள பகுதிக்கு ஒரு 16 வயது சிறுமியை தூக்கிச் சென்ற மர்ம நபர்கள், 12 மணி நேரம் அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.
இதில், பாதிக்கப்பட்ட சிறுமி போலீஸில் புகாரலித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கைது செய்துள்ளனர்.
தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited By Sinoj