வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 28 ஏப்ரல் 2021 (22:43 IST)

அந்த டியூன் பிடிக்கவில்லை..ஆனால் ஹிட்...அனிருத் ஓபன் டாக்

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், உள்ளிட்ட நடிகைகள் நடிப்பில் வெளியான படம் வேதாளம்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அதில், அனிருத் இசையமைத்திருந்த ஒரு ஹிட் பாடலைப் பற்றி சுவாரஸியமாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தில் அனிருத் இசையமைத்து ஹிட்டான ஆலுமா டோலுமா என்ற பாடல் தமிழகம் எங்கும் ஹிட் ஆனது. ஆனால் இப்பாடலின் டியூன் தனக்குப் பிடிக்கவில்லை என்றும், இப்பாடலைக் கம்பொஸ் செய்த பின் இதற்குப் பதிலாக வேறு பாடலை கம்போஸ் செய்துதருவதாக இயக்குநரிடம் கூறியதாக அனிருத் கூறியுள்ளார்.

ஆனால் இப்படல் இப்படத்தில் வெளிவர அஜித் சாரும் சிவா சாருமே காரணம் என அனிருத் கூறியுள்ளார்.