வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 மே 2021 (12:09 IST)

பெண்கள் பாதுகாப்புக்காக பேருந்துகளில் சிசிடிவி! – போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா பொருத்த இருப்பதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் தமிழகம் முழுவதும் சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பெண்கள் பாதுகாப்பிற்காக பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் மேற்கொள்ள இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள அவர் “மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் 1,400 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு பல வழித்தடங்களில் விரைவில் விரிவுபடுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.