திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (10:07 IST)

அர்ஜெண்டினா வெற்றியை கொண்டாடியவர்களுக்கு அரிவாள் வெட்டு! – கேரளாவில் பரபரப்பு!

Kerala
உலகக்கோப்பையில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றதை கொண்டாடியபோது வன்முறை சம்பவங்கள் நடந்தது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கத்தாரில் நடந்த ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி போட்டியில் பிரான்ஸ் – அர்ஜெண்டினா அணிகள் மோதிக் கொண்ட நிலையில், பிரான்சை வென்று அர்ஜெண்டினா வரலாற்று வெற்றியை பெற்றது. அர்ஜெண்டினாவின் இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

கால்பந்து ரசிகர்கள் அதிகமாக உள்ள கேரளாவிலும் பல பகுதிகளில் அர்ஜெண்டினாவின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினர். பல இடங்களில் அர்ஜெண்டினா கொடி, மெஸ்சியின் புகைப்படத்தோடு ரசிகர்கள் ஊர்வலம் சென்றனர். அப்படியாக நடந்த கொண்டாட்டத்தில் ரசிகர்களிடையே கைகலப்பு, வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது.

பள்ளியான்மூளை பகுதியில் அர்ஜெண்டினா வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் நடத்திய ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தால் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. கொல்லத்தில் நடந்த ஊர்வலகத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து திடீரென இறந்துள்ளார். இதுபோல தலச்சேரி, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளிலும் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

Edit By Prasanth.K