1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2017 (13:11 IST)

ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு ஒரே ஒரு டீ மட்டும் குடித்த தொழிலாளி

ரயில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.5 லட்சம் உள்ள பணப்பையை உரியவரிடம் சேர்த்து அதற்கு கைமாறாக ஒரே ஒரு டீ மட்டும் பெற்றுக்கொண்ட நேர்மையான சுமை தூக்கும் தொழிலாளி ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



 
 
சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த பொய்யாமொழி என்பவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் ரயிலில் பயணி ஒருவர் தவறிவிட்ட பையை கண்டெடுத்துள்ளார். அந்த பையில் ரூ.5 லட்சத்திற்கும் மேல் இருந்தும் அதனை ரயில்வே போலிசாரிடம் நேர்மையாக ஒப்படைத்துள்ளார். ரயில்வே போலிசார், பணப்பையை தவறவிட்ட பயணியை வரவழைத்து அவரிடம் அந்த பணப்பையை சேர்த்தனர்.
 
பணப்பையை நேர்மையாக ஒப்படைத்த பொய்யாமொழி, பயணி கொடுத்த பரிசை வாங்க மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக ஒரே ஒரு டீ மட்டும் வாங்கி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டாராம். இதுமட்டுமின்றி இதேபோல் பலமுறை பயணிகள் தவறவிட்ட பொருட்களை அவர்களுக்கு லட்டர் போட்டு வரவழைத்து கொடுத்திருக்கின்றாராம் இந்த பொய்யாமொழி. பெயருக்கு ஏற்றவாறு நேர்மையாக வாழ்ந்து வரும் பொய்யாமொழிக்கு ரயில்வே துறை நினைவுப்பரிசு வழங்கியுள்ளது.