செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 18 மார்ச் 2018 (17:45 IST)

நடனமாடியதால் மனைவியை கொலை செய்த கணவன்

திருமண நிகழ்ச்சியல் மனைவி நடனமாடியதால் ஆத்திரமடைந்த கணவன், அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சுபீர். இவரது மனைவி சப்னா. இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆனது முதலே கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
 
இந்நிலையில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சுபீரும் சப்னாவும் சென்றுள்ளனர். திருமண விழாவில் சப்னா நடனமாடியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த சுபீர், சப்னாவை கண்டித்துள்ளார். அங்கேயே கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு சென்ற சுபீர், சப்னாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
 
இதனையடுத்து காவல் நிலையத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது நடவடிக்கையின் மீது சந்தேகித்த போலீஸார் அவரை தீவிரமாக விசாரிக்கவே, சுபீர் தன் மனைவியை கொன்றதை ஒப்புக் கொண்டான். கணவனே மனைவியை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.