1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 17 மார்ச் 2018 (10:34 IST)

தினகரன் பச்சை கொலையாளி: நாஞ்சில் சம்பத் அதிரடி!

நேற்று முன்தினம் டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனி அமைப்பை மதுரையில் பிரமாண்டமாக தொடங்கினார். இது அரசியல் கட்சி அல்ல அமைப்பு என்றும் கூறினார். 
 
இந்நிலையில் நாஞ்சில் சம்பத் தினகரன் அணியில் இருந்து விலகியுள்ளார். இது தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தினகரன் அணியில் இருந்து விலகி இவர் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியில் சேர்வார என்ற கேள்வி எழுந்தது. 
 
இதற்கு நாஞ்சில் சம்பத் பின்வருமாறு பதில் அளித்துள்ளார். மேலூரில் நடந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமைப்பின் அறிமுக விழாவில் சில காரணங்களால் என்னால் பங்கேற்க முடியவில்லை. 

இந்த அமைப்பில் எனக்கு உடன்பாடு இல்லை. அண்ணா திராவிடம் என்பதை தவிர்த்துவிட்டு என்னால் பேச முடியாது. அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்திவிட்டு கட்சி நடத்தலாம் என தினகரன் நம்புகிறார்.
 
இதனால் நான் இனிமேல் இந்த அமைப்பில் இல்லை. அரசியலிலும் இல்லை. இதற்காக எதிர்வினை ஆற்றப்போவது இல்லை. தினகரன் பச்சை கொலை செய்து இருக்கிறார். இந்த அநியாயத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. 
 
இனி அரசியல் தமிழில் அடிப்பட்டு கிடக்கமாட்டேன். இனி தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம் என கூறியுள்ளார். நாஞ்சில் சம்பத்தின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.