திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 16 மார்ச் 2018 (14:14 IST)

மனைவியின் நடத்தையில் சந்தேகம்- தாயையும், குழந்தையையும் எரித்து கொன்ற கணவன் கைது

கள்ளக்குறிச்சியில் தாயும், 6 மாத குழந்தையும் உடல் கருகி பலியான சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்தனர் போலீசார்.
 
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கனகா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
 
சரவணன் மாற்றுதிறனாளி என்பதால் தனது பெற்றோர்களுக்கு வரும் பென்சன் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். 
 
கடந்த செவ்வாய்கிழமை சரவணன் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கனகாவும், 6 மாத குழந்தையும் உடல் கருகி பலியானார்கள். சரவணன் அவரது பெண் குழந்தையுடன் தீ விபத்தில் இருந்து உயிர் தப்பினர்.
 
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சரவணணை விசாரித்த போது திடுக்கிடம் தகவல் தெரியவந்துள்ளது. சரவணன் தனது மனனவியின் நடத்தை மீது சந்தேக பட்டு இறந்த போன 6 மாத ஆண் குழந்தை தன்னுடைய குழந்தை இல்லை என கூறி சண்டை போட்டுள்ளார். இந்த சண்டையில் மிகவும் கோபமடைந்த சரவணன் தனது மனைவி கனகாவையும்,6 மாத குழந்தையும் தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதனால் போலீசார் சரவணணை கைது செய்துள்ளனர்.