திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 20 ஜூன் 2018 (08:35 IST)

ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி: குடியரசு தலைவர் உத்தரவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த மக்கள் ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாரதிய ஜனதா கட்சி நேற்று திடீரென வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து முதல்வர்  மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். இதனையடுத்து அம்மாநிலத்தில் ஆளுனர் ஆட்சி அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இதனையடுத்து காஷ்மீரில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டுக்கட்சியும் முன்வரவில்லை என்பதால் ஆளுனர் ஆட்சிக்கு பரிந்துரை செய்து ஜம்முகாஷ்மீர் ஆளுனர் வோரா மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு  கடிதம் எழுதியுள்ளதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி ஜம்மு காஷ்மீரில் ஆளுனர் ஆட்சி அமலுக்கு வந்தது. ஆளுனர் வோராவின்  பரிந்துரையை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கு ஆளுனர் ஆட்சிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆளுனர் ஆட்சி ஆறு மாத காலத்திற்கு இருக்கும் என்றும், அதற்குள்  புதிய அரசு அமைய முயற்சி எடுத்தால் ஆளுனர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்படும் என்றும் இல்லையெனில் ஆளுனர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்குப் பின் நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது