1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 ஜூன் 2018 (17:15 IST)

நடிகை நக்மா டிஸ்மிஸ்: காங்கிரஸ் கட்சி அதிரடி

ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' உள்பட பல படங்களில் நடித்த நடிகை நக்மா, தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து வந்த நிலையில் சற்றுமுன் அவர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார். அவருக்கு பதிலாக தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக பாத்திமா ரோஸ்னா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை இழந்தாலும் நடிகை நக்மா, ஜம்மு - காஷ்மீர் மற்றும் புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக தொடர்ந்து செயல்படுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. 
 
கடந்த 2015ஆம் ஆண்டு அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில, மகளிர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்ட நடிகை நக்மா, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டது ஏன் என்பது குறித்த விளக்கம் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.