ஸ்மார்ட்போன் நிறுவனத்தை வாங்கிய கூகுள்!!


Sugapriya Prakash| Last Updated: சனி, 23 செப்டம்பர் 2017 (21:31 IST)
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹெச்டிசி-ஐ கூகுள் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் ஒப்பந்ததில் ரூ.110 கோடி கைமாற்றப்பட்டுள்ளது.

 
 
தைவானை சேர்ந்த ஹெச்டிசி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிரிவை கூகுள் நிறுவனம் வாங்கி உள்ளது. இதனால், ஹெச்டிசி நிறுவனத்தின் 2,000 பணியாளர்கள் கூகுள் நிறுவனத்தில் இணையயுள்ளனர்.
 
ஏற்கெனவே கூகுள் நிறுவனம் மோட்டரோலா நிறுவனத்தை 2012 ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. ஆனால் ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டியிட முடியாததால், சீனாவை சேர்ந்த லெனோவா நிறுவனத்திடம் மோட்டரோலா பிராண்டை கூகுள் விற்றது.


இதில் மேலும் படிக்கவும் :