இந்தியாவுக்கு வெள்ள நிவாரணம் அறிவித்த கூகுள்


Abimukatheesh| Last Updated: வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (17:08 IST)
இந்தியா உள்பட மூன்று நாடுகளுக்கு வெள்ள நிவாரணாமாக 1 மில்லியன் டாலர் வழங்க உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 
இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்ய கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது. 
 
அதன்படி இந்தியா உள்பட 3 நாடுகளுக்கும் நிவாரண தொகையான 1 மில்லியன் டாலர் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதை தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவிற்கான கூகுள் நிறுவன துணைத்தலைவர் அறிவித்தார்.
 
கூகுள் நிறுவனத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனமான கூகுள் ஆர்க் மூலம் இந்த உதவி வழங்கப்படுகிறது. இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் 75 குடும்பங்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இதேபோல் நேபாளம் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள மக்களுக்கும் உதவிகளை செய்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :