வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (12:25 IST)

மரண ஊளையிடும் புளூ வேல்; காட்டி கொடுக்கும் கைகள்!

புளூ வேல் சூசைட் சேலஞ்ச் என்ற இணையதள விளையாட்டு இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
புளூ வேல் சூசைட் சேலஞ்ச் என்ற இணையதள விளையாட்டு உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த விளையாட்டை ரஷ்யாவைச் சேர்ந்த நபர் ஒருவர் வடைமைத்துள்ளார். இதற்காக அவர் கடந்த ஆண்டு ரஷ்ய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மூன்றாண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விளையாட்டால் உலகம் முழுவதும் 18 நாடுகளில் இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
 
கடந்த மாதம் இந்தியாவில் மும்மையைச் சேர்ந்த 10வயது சிறுவன் இந்த விளையாட்டை விளையாடி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் தற்போது தொடர்ந்து இந்த விளையாட்டால் உயிரிழப்பு அதிகமாகி வருகிறது. கேரள மாநிலத்தில் இரண்டு பேர். மதுரையில் கல்லூரி மாணவன் என தற்கொலை தொடர்கிறது. 


 

 
கூகுளில் புளூ வேல் சார்ந்த தேடலில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து சான் அண்டொனியோ, நைரோபி, கவுகாத்தி, சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹவுரா, பாரிஸ் உள்ளிட்ட நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 
 
இந்த விளையாட்டை கடந்த 1 வருடமாக  கூகுளில் அதிகம் தேடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. அதில் சென்னை உள்பட ஐந்து நகரங்கள் இடம்பெற்றுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியாவில் உள்ள ஐந்து நகரங்களில் புளூ வேல் கேம் சார்ந்த தேடல் அதிகமாகியுள்ளது. 
 
இந்த கேம் விளையாடுபவர்களுக்கு தினமும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். ஒவ்வொரு டாஸ்கிலும் கைகளை அறுத்துக்கொள்ளுதல், நள்ளிரவில் பேய் படம் பார்பது, மொட்டை மாடி சுவரில் ஏறி நின்று பாடல் கேட்பது போன்ற கொடூரமான டாஸ்க் கொடுக்கப்படும். ஒவ்வொரு டாஸ்க்கையும் முடித்தால்தால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். 


 

 
இப்படி அடுத்த கட்டம், அடுத்த கட்டம் என இறுதியாக 50வது நாளில் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படும். இதை விளையாடியவர்கள் தற்கொலை செய்துக்கொள்ள தூண்டப்படுகின்றனர். இதனால் இறுதியில் இவர்கள் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். இந்த கேம் மூலம் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள்.
 
இந்தியாவில் இந்த விளையாட்டால் பெரும்பாலும் உயிரிழந்தவர்கள் கல்லூரி மாணவர்கள். 


 

 
இந்த விளையாட்டு எப்படி இருக்கும் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே இதன்மூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்கானித்து, காப்பாற்றிவிடலாம். புளூ வேல் சூசைட் சேலஞ்ச் கேம் விளையாடி உயிரிழந்தவர்கள் அனைவரின் கையில் கீறல்கள் உள்ளது. பெரும்பாலும் திமிங்கலம் போன்ற அமைப்பில் அந்த கீறல்கள் உள்ளது. 
 
திடீரென அனைவரிடமும் இருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். தனிமையில் அதிகமாக நேரத்தை செலவிடுகின்றனர். இதுபோன்ற அறிகுறிகளை வைத்து புளூ வேல் கேம் விளையாடுபவர்களை எளிதாக கண்டறியலாம். பெற்றொர்கள் தங்கள் பிள்ளைகளை புளூ வேல் சூசைட் சேலஞ்ச் விளையாட்டில் இருந்து காப்பாற்ற தற்போதைக்கு இருக்கும் ஒரே வழி இதுதான்.