வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2017 (19:23 IST)

சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த இந்தியா

சர்வதேச மேட்டார் சைக்கிள் சந்தையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 


 

 
இந்தியாவில் மோட்டார் சைக்கிளின் பயன்பாடு அதிகமாகி கொண்டிருக்கிறது. அதன்படி 2016 - 2017 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 1.75 கோடி மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மோட்டர் சைக்கிள் நிறுவனங்கள் போட்டிப்போட்டு கொண்டு புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றனர். 
 
இதனால் சர்வதேச மோட்டார் சைக்கிள் சந்தையில் இந்தியா முன்னிலை பெற காரணமாக உள்ளது என கூறப்படுகிறது. இதன்மூலம் இந்தியா சீனாவை வீழ்த்தி முதலிடம் பெற்றுள்ளது. சந்தையில் சீனாவை சுமார் 9 லட்சம் மோட்டார் சைக்கிள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளியுள்ளது.
 
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து பஜாஜ் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களுக்கு ராயல் என்ஃபீல்டு புல்லட் ரக வாகனங்கள் போட்டியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.