#ShameOnGautamGambhir: ஜிலேபியால் கப்பலேறிய காம்பீர் மானம்...
டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் கொண்ட்டாட்டத்தில் இருப்பதால் #ShameOnGautamGambhir என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
பாஜவில் இணைந்த கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கடந்த மக்களவை தேர்தலின் போது டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது காம்பீரை எதிர்த்து #ShameOnGautamGambhir என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
டெல்லியில் உள்ள காற்று மாசு நெருக்கடி குறித்து விவாதிக்க இன்று உயர்மட்ட நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு காம்பீரும் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வர்ணணையாளராக இருப்பதால் கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை.
இதுமட்டுமல்லாமல் அங்கு தனது நண்பர்களுடன் ஜிலேபி சாப்பிட்டு கொண்டாட்டத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் போடப்பட்டுள்ளது. இதனால் கடுப்பான ஆம் ஆத்மி அந்த புகைப்படத்தை குறிப்பிட்டு காம்பீருக்கு எதிராக காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து #ShameOnGautamGambhir என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.