திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (20:51 IST)

2 நாட்கள் பள்ளிகளை மூட வேண்டும்..

டெல்லியில் காற்று மாசு காரணமாக இரண்டு நாட்கள் பள்ளிகளை மூட வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது.

டெல்லியில் சமீப நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். மேலும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்கள் பள்ளிகளை மூட வேண்டும் என மாநில மாசுக் கட்டுபாட்டு வாரியம் டெல்லி அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.