வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2019 (18:07 IST)

இதுவரை பறிமுதல் செய்த பணம் எவ்வளவு? தேர்தல் ஆணையத்தின் அதிர்ச்சி தகவல்

தேர்தல் தேதி வெளியிட்ட நாள் முதல் தினந்தோறும் பறக்கும் படையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணத்தையும் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி ஆகியவற்றையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் நாடு முழுவதும் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக இதுவரை ரூ 2385.65 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
அதேபோல் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ 468.72 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் பறிமுதல் செய்த மொத்த தொகையில் கிட்டத்தட்ட 4ல் ஒரு பங்கு தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்னும் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிய ஒரு வாரம் இருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் ரூ.500 கோடிக்கும் மேல் பறிமுதல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது