வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2019 (08:59 IST)

ரூ.56 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: இதுவரை பிடிப்பட்டதில் மிக அதிகம்!

மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே தேர்தல் ஆணையத்தின் ஒரு பிரிவான பறக்கும் படை அதிகாரிகள் நாடு முழுவதும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு பலகோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் இதுவரை வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனைகளில் 140 கோடி ரூபாய் ரொக்கமும் 140 கோடி ரூபாய் மதிப்புள்ள 521 கிலோ தங்கம் மற்றும் 421 கிலோ வெள்ளி பொருட்களும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் நேற்றிரவு சென்னையில் வாகனச்சோதனையில் பறக்கும் படையினர் ஈடுபட்டிருந்தபோது ஒரு வேனில் இருந்த ரூ.56 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்கக்கட்டிகளை ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்து, பின்னர் விமானம் மூலம் மும்பைக்கு எடுத்து செல்ல முயன்றபோது  தேர்தல் பறக்கும் படையினர்  கைப்பற்றியுள்ளதாகவும், இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தகவ்ல்கள் வெளிவந்துள்ளது.
 
ஆதம்பாக்கம் அருகே இந்த தங்கம் பிடிபட்டதாகவும், சுமார் 75 கட்டிகள் கொண்ட இந்த தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.56 கோடி என்றும், இதுவரை பிடிபட்டதில் இதுதான் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட அதிகளவிலான தங்கம் என்றும் கூறப்படுகிறது.